Sunday, November 2, 2014

நீ...

நான் கண்ட கனவினில் அழகிய நிஜம் நீ..
என் நிஜத்தினில் கனவாய் இருப்பதேனோ.. !!

பூக்களுக்கு விலங்கு மாட்ட தேவையில்லை..
பூவே நீ என்னை பூட்டி வைப்பதேனோ..!!

மர நிழலில் சாய்ந்து நின்றபோதும்..
உன் நினைவில் என்னை சுட்டெரிப்பதேனோ..!!

எழுதி எழுதி பேனா மை தீர்ந்த பின்னும்...
நான் கிறுக்கினேன் கிறுக்கனாய்..!!

Tuesday, May 29, 2012

மொழி...


நான் கற்ற மொழிகளிலே
எளிதாய் கற்ற மொழி
அவளது
மௌன மொழி.....

Friday, November 25, 2011

வரம்...




முன்னூறு நாட்கள் தவமிருந்தேன்
வரம் வாங்க அல்ல
வரமாய் மாற
தாயின் கருவறையில்...!!!

Monday, November 21, 2011

தீபாவளி மச்சி...















மூன்று நாட்களுக்கு முன்பே கவனம் இல்லை வேலையில்..
குழப்பம் என்ன வாங்குவது ஏது வாங்குவது..
பதட்டம் பயணசீட்டும் உறுதியாகவில்லை..
அவசரமாய் கிளம்பினேன் அனைவருக்கும் கை அசைத்து..!!!

எங்கு பார்த்தாலும் தீபாவளி வாழ்த்து செய்தி..
கை பேசி கூட களைத்து விட்டது என் வருகையை
அனைவருக்கும் சொல்லி...
கொட்டும் மழையில் என் கவனமெல்லாம் மணியில்..
ஒரு வழியாய் பிடித்து விட்டேன் ரயிலை..
என் பெயரை பார்த்தவுடன் நிம்மதிப் பெருமூச்சு...!!!

எதிர் இருக்கையில் குழந்தைகள் கேள்வி..
"அம்மா ரயில் எப்பம்மா ஊருக்குப் போகும் ...."
என் மனதிலும் அதே கேள்வி...சிரித்தேன் மனதுக்குள்..
நகர்ந்தது ரயில் வண்டி என் நினைவுகளோடு...!!!

விடிந்தது.. ஜன்னல் வழியே ஊரின் வாசம்..
எனக்கு பழகிய இடங்கள் அன்று புதுமையானது..
வழியெல்லாம் தீபாவளி கொண்டாட்டம்..
நடந்தேன் வீட்டை நோக்கி..!!!

வாசலில் நிற்பது அம்மா தான்..
கண்டு கொண்டேன் அவள் புடவை வாசம் கொண்டு..
வாயில் புன்னகையும் தட்டில் பலகாரமும் சுமந்து நின்றால்..
அருகில் சென்றதும் ஆ காட்டு என்றால்..!!!

ஆ..... காட்டினேன் ஆசையாய்...
என்னை திட்டும் ஓசை..

டேய் மச்சி... அப்போ டெலிவரி அனுப்பிட்டு நீ இன்னும் தீபாவளிக்கு
ஊருக்கு போகலையா...
முடியிரதுக்குள்ள போடா... அப்போ நான் கெளம்புறேன்...!!!


Thursday, November 17, 2011

அறிந்தவன் ...




தன்னுயரம் அறியாத மரம்
தரையை நோக்கி சாயும்..

தன் எடை அறியாத காகம்
தரையில் முட்டி சாகும்..

தன்னை அறிந்தவன் இங்கே ஒரு சிலரே !!!!


Wednesday, November 16, 2011

கொலைகாரன்பேட்டை...!!!!















கொலைகாரன்பேட்டையில் பிறந்தவன் நீ!!

ஆட்டம் தொடங்கி விட்டது..

ஆட்டத்தின் நடுவில் நீ..
வழுக்குமர வாசலில் நீ..
பின்வாங்கி செல்ல அனுமதி இல்லை..
விதிமுறைகள் என்பது இங்கே இல்லை..
ஏளனம் செய்பவர்களுக்கு எல்லை இங்கில்லை..

ஆட்டத்தின் நடுவில் நீ..
வழுக்குமர வாசலில் நீ..
தோல்விகள் உன்னை துரத்தும்..
தறுதலைகள் எல்லாம் மிரட்டும்..
குறைகளை சொல்லியே வருத்தும்..

ஆட்டத்தின் நடுவில் நீ..
வழுக்குமர வாசலில் நீ..
பாம்பென்றால் பகல்வார்கள்...
சிங்கமென்றால் சிரிப்பார்கள்..
நாய் என்றாலும் நகல்வார்கள்..

நீ நீயாய் மாறு..
தோல்விகளை வலிகளாய் மாற்று..
வலிகளை வழிகளாய் மாற்று..
வழிகளை வாழ்க்கையாய்  மாற்று..
உன் விதியை மாற்று... ஆட்ட விதியை மாற்று....

அது வரை இந்த உலகம்
உன்னை பார்த்து சிரிக்கும்
கொலைகாரன்பேட்டையாய்...!!!
நினைவுகொள் கொலைகாரன்பேட்டையில் பிறந்தவன் நீ!!

Tuesday, November 15, 2011

புரிதல்...


காதலிக்கிறாயா என்று கேட்டேன்...
என்னை புரிந்துகொள் என்றாய்...

என்னை நன்கு புரிந்தவன் நான்...
நான் தான் நீ..!!!