Sunday, November 2, 2014

நீ...

நான் கண்ட கனவினில் அழகிய நிஜம் நீ..
என் நிஜத்தினில் கனவாய் இருப்பதேனோ.. !!

பூக்களுக்கு விலங்கு மாட்ட தேவையில்லை..
பூவே நீ என்னை பூட்டி வைப்பதேனோ..!!

மர நிழலில் சாய்ந்து நின்றபோதும்..
உன் நினைவில் என்னை சுட்டெரிப்பதேனோ..!!

எழுதி எழுதி பேனா மை தீர்ந்த பின்னும்...
நான் கிறுக்கினேன் கிறுக்கனாய்..!!

Tuesday, May 29, 2012

மொழி...


நான் கற்ற மொழிகளிலே
எளிதாய் கற்ற மொழி
அவளது
மௌன மொழி.....

Friday, November 25, 2011

வரம்...




முன்னூறு நாட்கள் தவமிருந்தேன்
வரம் வாங்க அல்ல
வரமாய் மாற
தாயின் கருவறையில்...!!!

Monday, November 21, 2011

தீபாவளி மச்சி...















மூன்று நாட்களுக்கு முன்பே கவனம் இல்லை வேலையில்..
குழப்பம் என்ன வாங்குவது ஏது வாங்குவது..
பதட்டம் பயணசீட்டும் உறுதியாகவில்லை..
அவசரமாய் கிளம்பினேன் அனைவருக்கும் கை அசைத்து..!!!

எங்கு பார்த்தாலும் தீபாவளி வாழ்த்து செய்தி..
கை பேசி கூட களைத்து விட்டது என் வருகையை
அனைவருக்கும் சொல்லி...
கொட்டும் மழையில் என் கவனமெல்லாம் மணியில்..
ஒரு வழியாய் பிடித்து விட்டேன் ரயிலை..
என் பெயரை பார்த்தவுடன் நிம்மதிப் பெருமூச்சு...!!!

எதிர் இருக்கையில் குழந்தைகள் கேள்வி..
"அம்மா ரயில் எப்பம்மா ஊருக்குப் போகும் ...."
என் மனதிலும் அதே கேள்வி...சிரித்தேன் மனதுக்குள்..
நகர்ந்தது ரயில் வண்டி என் நினைவுகளோடு...!!!

விடிந்தது.. ஜன்னல் வழியே ஊரின் வாசம்..
எனக்கு பழகிய இடங்கள் அன்று புதுமையானது..
வழியெல்லாம் தீபாவளி கொண்டாட்டம்..
நடந்தேன் வீட்டை நோக்கி..!!!

வாசலில் நிற்பது அம்மா தான்..
கண்டு கொண்டேன் அவள் புடவை வாசம் கொண்டு..
வாயில் புன்னகையும் தட்டில் பலகாரமும் சுமந்து நின்றால்..
அருகில் சென்றதும் ஆ காட்டு என்றால்..!!!

ஆ..... காட்டினேன் ஆசையாய்...
என்னை திட்டும் ஓசை..

டேய் மச்சி... அப்போ டெலிவரி அனுப்பிட்டு நீ இன்னும் தீபாவளிக்கு
ஊருக்கு போகலையா...
முடியிரதுக்குள்ள போடா... அப்போ நான் கெளம்புறேன்...!!!


Thursday, November 17, 2011

அறிந்தவன் ...




தன்னுயரம் அறியாத மரம்
தரையை நோக்கி சாயும்..

தன் எடை அறியாத காகம்
தரையில் முட்டி சாகும்..

தன்னை அறிந்தவன் இங்கே ஒரு சிலரே !!!!


Wednesday, November 16, 2011

கொலைகாரன்பேட்டை...!!!!















கொலைகாரன்பேட்டையில் பிறந்தவன் நீ!!

ஆட்டம் தொடங்கி விட்டது..

ஆட்டத்தின் நடுவில் நீ..
வழுக்குமர வாசலில் நீ..
பின்வாங்கி செல்ல அனுமதி இல்லை..
விதிமுறைகள் என்பது இங்கே இல்லை..
ஏளனம் செய்பவர்களுக்கு எல்லை இங்கில்லை..

ஆட்டத்தின் நடுவில் நீ..
வழுக்குமர வாசலில் நீ..
தோல்விகள் உன்னை துரத்தும்..
தறுதலைகள் எல்லாம் மிரட்டும்..
குறைகளை சொல்லியே வருத்தும்..

ஆட்டத்தின் நடுவில் நீ..
வழுக்குமர வாசலில் நீ..
பாம்பென்றால் பகல்வார்கள்...
சிங்கமென்றால் சிரிப்பார்கள்..
நாய் என்றாலும் நகல்வார்கள்..

நீ நீயாய் மாறு..
தோல்விகளை வலிகளாய் மாற்று..
வலிகளை வழிகளாய் மாற்று..
வழிகளை வாழ்க்கையாய்  மாற்று..
உன் விதியை மாற்று... ஆட்ட விதியை மாற்று....

அது வரை இந்த உலகம்
உன்னை பார்த்து சிரிக்கும்
கொலைகாரன்பேட்டையாய்...!!!
நினைவுகொள் கொலைகாரன்பேட்டையில் பிறந்தவன் நீ!!

Tuesday, November 15, 2011

புரிதல்...


காதலிக்கிறாயா என்று கேட்டேன்...
என்னை புரிந்துகொள் என்றாய்...

என்னை நன்கு புரிந்தவன் நான்...
நான் தான் நீ..!!!

Friday, November 4, 2011

கற்பனை...


என் கவிதைகளுக்கு
விதையாய் இருந்தது கற்பனை...

செல்லாத இடத்திற்கு
கூட்டிச்சென்றது கற்பனை...

சொல்லாத வார்த்தையை
சொல்ல வைத்தது கற்பனை...

இல்லாத காதலிக்கு
பொட்டு வைத்தது கற்பனை...

வான் கோ வரைந்தது கற்பனை..
வானின் எல்லை கற்பனை...
வார்த்தையின் எல்லை கற்பனை..

இது
என்னையும் எழுத வைத்த
கற்பனையை பற்றிய கற்பனை... !!!

Wednesday, November 2, 2011

கண்டுபிடிக்க முடியவில்லை
ஆறு
வித்தியாசங்கள்
தோற்றுவிட்டேன்.....

பூவிற்கும்... அவளுக்கும்....

Friday, October 17, 2008

சாதி என்னும் சதி..

சாதிச் சான்றிதழ் தேவை
பாரதியார் பல்கலைக்கழகத்தில் சேர..

மாறுகின்ற உலகம்
மாற்றுகின்ற காலம்
வேற்றுமை அற்ற உலகில்
மாறாத மனிதர்கள்...

Tuesday, October 14, 2008

படித்ததில் பிடித்தது...




வறுமை..
அந்த சிறுவன் நேற்று
இரவு மட்டும்
நீண்ட நேரம் படித்தான்
பரீட்சை என்பதால் அல்ல ....
பௌர்ணமி என்பதால்....


Sunday, October 12, 2008

ஹைக்கூ...

மழை நின்ற
பின்
குடை
- காளான்

Friday, September 26, 2008

ஆயுதம் !!!

எழுந்திரு நண்பனே !
எழுந்தரு !
இன்று முதல்
சேவல் உனக்காக தினமும் கூவிடும் !
வானம் உனக்கெனத் தனிமழை பொழியும் !
காலம் உனக்காகக் கணித்துக் கூறும் !
தேவை உன்னைக் கேட்காமல் சேரும் !
மலையும் கூட சிறுமேடாய் மாறும் !
நாளை நடப்பது நல்லதென்று தெரியும் !
எதிர்காலம் உன்னை எதிர்நோக்கி நிற்கும் !
தலைவனாய்க் கருதி தலைமேல் வைக்கும் !

இச்சத்தியங்கள் சாத்தியம்
நம்பிக்கை - உன் ஆயுதமானால் !!!

Wednesday, September 24, 2008

தொடக்கம்..

என் சில படைப்புகளை அளிக்கிறேன் ...
உங்களின் பார்வைக்காக...